டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமானப் பணிகள் : அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

டெல்லி : புதுடெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் உள்ள பழைய வைகை இல்ல கட்டடங்கள் அகற்றப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்து, இன்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்ல கூட்டரங்கில் அலுவலர்களுடன் ஆய்வு செய்து, பின்பு வைகை இல்ல கட்டுமானப் பணிகளை புதுடெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களுடன் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., பொதுப்பணித்துறையின் புதுடெல்லி உள்ளுறை ஆணையர் திரு.ஆஷிஷ்குமார் இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.கே.பி.சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் திரு.இரா.விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.மணிவண்ணன் துறைச் சார்ந்த பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

The post டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமானப் பணிகள் : அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: