லோயர்கேம்பில் மின் உற்பத்தி குறைந்தது

கூடலூர், அக்.2: பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரைக் கொண்டு லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வரை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடிக்கு மேல் திறக்கப்பட்டதால் லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு இயந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

தற்போது அணைப்பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டமும் நீர் இருப்பும் குறைந்து வரும்நிலையில், அணையில் இருந்து நீர் திறப்பும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் குறைக்கப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 1,422 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில், நான்கு இயந்திரங்களில் தலா 32 மெகாவாட் வீதம் மொத்தம் 128 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

The post லோயர்கேம்பில் மின் உற்பத்தி குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: