×

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இன்று, காந்தி ஜெயந்தியன்று, பகல் 11மணிக்கு கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி எல்கைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், திட்டப்பணிகள், தணிக்கை அறிக்கை, மழை நீர் சேகரிப்பு, குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டப்பொருள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Sivagangai district ,Sivagangai ,Collector ,Asha Ajith ,Gandhi Jayanti ,Sivaganga district ,
× RELATED வாகனங்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை