×

மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு 60 பேர் தேர்வு

மதுரை: மாநில அளவிலான தெரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த 60 பேர் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேசிய பள்ளிகளின் குழுமம், பள்ளிகல்வித்துறையின் உடற்கல்விப் பிரிவு சார்பில் ஆண்களுக்கான மாநில அளவிலான தெரிவு துப்பாக்கி சுடும் போட்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ரைபிள் கிளப்பில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா துவக்கி வைத்தார்.

உடற்கல்வி ஆய்வாளர் வினோத் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். போட்டியானது பிஸ்டர், பீப்சைட், ஓபன்சைட் ஆகிய பிரிவுகளின் கீழ் நடந்தது. இதில் இலக்கை நோக்கி சுட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் மூலம் வீரர்கள் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறினர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் டிசம்பரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

The post மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு 60 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,National Group of Schools ,Physical Education Division of School Education ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு