×
Saravana Stores

மாணவரை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது

 

மதுரை: மதுரை அருகே சிலைமானில் வாலிபரை வெட்டிக் கொன்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே வரிச்சியூர் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் தனபால்(19). இவர் மதுரையில் கல்லூரியில் 2ம் ஆண்டு இளநிலை தமிழ் படித்து வந்தார். இவருக்கும் வைத்தியநாதபுரம் காலனியைச் சேர்ந்த கருப்பு(22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பறையன் குளத்தில் உள்ள சுடுகாட்டில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி இரவு டூவீலரில் சென்று கொண்டிருந்த தனபாலை பின் தொடர்ந்து சென்று மதுரை சிவகங்கை ரோடு நாட்டார்மங்கலத்தில் வழிமறித்த இருவர் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து அவரது சகோதரர் ரஞ்சித் புகாரில், சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பு என்பவரை கைது செய்தனர். இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாணவரை வெட்டிக் கொன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dhanapal ,Varichiyur Vaidyanathapuram ,Vaidyanathapuram ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனை கட்டிடங்களின்...