×

எம்.பி.பி.எஸ் கட்ஆப்பில் வேறுபாடு: மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறதா?

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களில் வேறுபாடு வந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசு கல்லூரிகளில் ஓசி, பிசி, எம்பிசி மற்றும் எஸ்சி பிரிவினருக்கான கட்-ஆப் 2வது சுற்றில் முறையே 651, 620, 603 மற்றும் 536 ஆக உயர்ந்துள்ளது.

பிசிஎம் மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கு 612 மற்றும் 463 மதிப்பெண்கள் தேக்கமில்லாமல் இருந்தது. ஆனால் எஸ்டி பிரிவினருக்கு 10 மதிப்பெண்கள் அதிகரித்தது. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கு 9 மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களின் கட்-ஆப் முதலாவது சுற்றில் 535 ஆக இருந்தது. இது, 2வது சுற்றில் 531 ஆக குறைந்தது. கடந்த 2023ல் கட்-ஆப் 399 மதிப்பெண்களாக இருந்தது, இது முதல் சுற்றில் 433ல் இருந்து 34 புள்ளி சரிந்துள்ளது.

கடந்த 2022ல் ஆண்டில் நடந்து கவுன்சலிங்கில், 2ம் சுற்றுக்கான கட்-ஆப் 348 ஆக இருந்தது, இது 1வது சுற்றில் இருந்து 98 புள்ளிகள் சரிவடைந்தது. பயிற்சியாளர் பிரேம்சங்கர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு ஒதுக்கீடு அதிக எதிர்பாராத போக்குகளை வெளிப்படுத்தியுள்ளன. பல் மருத்துவ சேர்க்கைக்கான பிசி பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆப் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கீழே குறைந்துள்ளதை காட்டுகிறது’’ என்றார்.

The post எம்.பி.பி.எஸ் கட்ஆப்பில் வேறுபாடு: மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறதா? appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,MBBS ,BDS ,OC ,PC ,MBC ,MPBS ,Dinakaran ,
× RELATED எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது