நெல்லை, குமரி மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் தகவல் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் அக்.30க்குள் புதுப்பிக்கலாம்

நெல்லை, அக். 2: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் அக்.30க்குள் புதுப்பிக்கலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் தமிழ்ச் செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் வரும் 2025ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு ஆன்லைன் மூலம் உரிமத்தை புதுப்பிக்க அக்.30ம் தேதி கடைசி நாளாகும். எனவே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் பேமண்ட் மட்டுமே செலுத்த வேண்டும். (இதற்கு முன்பு செலுத்தியவாறு கேட்பு வரைவோலை, செலுத்துச் சீட்டு, டிடி, சலான் முறையில் செலுத்த வேண்டாம்).

இந்த விவரத்தை ஆன்லைன் படிவம் 2ல் கலம் 14ல் அதற்குரிய கலத்தில் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் முறையில் மட்டும் உரிம கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து ஆன்லைன் முறையிலேயே உடன் தொழிற்சாலை உரிமம் புதுப்பித்து வழங்கப்படுவதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உரிய முறையாக உரிம விண்ணப்பம், உரிய உரிமத் தொகைக்கான ஆன்லைன் பேமண்ட் உடன் ஆன்லைன் போர்டலில் அப்லோட் செய்த உடனேயே தொழிற்சாலை சட்ட உரிமம் புதுக்பிக்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே உடன் வழங்கப்பட்டு விடும். அதற்காக அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிம திருத்தம் மற்றும் உரிம மாற்றம் ஆகியவற்றிற்கு உரிய தொகை செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து படிவம் – 2, மூன்று நகல்கள் கட்டணம் செலுத்தப்பட்ட விவரத்துடன் இணைத்து நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை, குமரி மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் தகவல் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் அக்.30க்குள் புதுப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: