- சமையல்காரர்
- சுங்கங்கடை
- திங்கள்சாந்தி
- ஐயப்பன்
- கல்யாண்காடு வட்டப்பாறை
- நாகர்கோவில்
- வஸந்தகுமாரி
- வெங்கடேசன்
திங்கள்சந்தை, அக்.2: நாகர்கோவில் சுங்கான்கடை அருகே உள்ள களியங்காடு வட்டபாறை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். அவரது மனைவி வசந்தகுமாரி (63). நெசவு தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், வெங்கடேசன் (36) என்ற மகனும் உண்டு. மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கழுத்தில் வலி ஏற்பட்டதால் ஊருக்கு வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 28ம் தேதி வெங்கடேசன் அவரது தாயாருடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது வெங்கடேசன் இரவு நேரங்களில் சரியாக தூங்காததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மனநல மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறவும் டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் இனி நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று புலம்பி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே இருதினங்களுக்கு முன் காலை வெங்கடேசன் வீட்டில் நைலான் சேலையில் தூங்கு மாட்டி இறந்து தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சுங்கான்கடை அருகே சமையல் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.