- அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் கூட்டமைப்பு
- தக்கலை
- தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்
- குமாரி
- மாவட்டப் பொதுக்குழு
- தக்கலை அரசு ஊழியர் சங்க மாநாட்டு அரங்கம்
- ரேமண்ட்
- அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்
- தின மலர்
தக்கலை, அக். 2: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரைமண்ட் தலைமை வகித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சாந்த சீலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டோமினிக் ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் வட்டார, கல்வி மாவட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும். அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் நியமனம் பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை வெற்றியடையச் செய்யவேண்டும். இந்த படிவங்களில் கல்வி ஆர்வலர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்துக்களைப் பல்லாயிரக் கணக்கில் பெற்று 18.10.2024 அன்று கலெக்டரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
The post ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.