×

நெல்லை அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது

நெல்லை, அக்.2: நெல்லை அருகே மாறாந்தையில் உள்ள தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவரை போலீசார் கைதுசெய்தனர். நெல்லை அருகேயுள்ள மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (59). இவர் ஊருக்கு வெளியே தனக்கு சொந்தமாக உள்ள தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றதோடு அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த செல்லத்துரையை சுற்றி வளைத்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கள்ளசாராய ஊறல் மற்றும் 3 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து செல்லத்துரையை கைதுசெய்தனர்.

The post நெல்லை அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Maranthai ,Chellathurai ,Dinakaran ,
× RELATED கேரளத்தில் இருந்து வாகனங்களில்...