×

பேட்டையில் பெயிண்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பேட்டை, அக்.2: பேட்டையில் பெயிண்டருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அடுத்த பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் மாரியப்பன் ( 39) மற்றும் கோவில்பட்டி தமஸ் நகரை சேர்ந்த ஆனந்த் (41) ஆகிய இருவரும் நெல்லை டவுன் மார்க்கெட்டில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தனர். பேட்டை அடுத்த நரசிங்கநல்லூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு ஆட்டோவில் நேற்று ஆனந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாரியப்பன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 தருமாறு கேட்டார். அதற்கு ஆனந்த் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், கத்தியால் ஆனந்த் காதில் தாக்கிவிட்டு சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பேட்டை போலீசார், மாரியப்பனை கைது செய்தனர்.

The post பேட்டையில் பெயிண்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Hood ,VELUCHAMI ,KATPOMMAN STREET ,PADEL ,Mariyappan ,Anand ,Kovilpatty Thames ,
× RELATED தொடர் மழையால் ஆர்.கே.பேட்டையில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்