×

நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு விருது

நெல்லை, அக். 2: நெல்லை பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இருதய சிகிச்சை பிரிவில் அதிநவீன தொழில்நுட்ப முறையில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை செய்து வரும் நெல்லை ஷிபா மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம் முகமது ஷாபிக்கு சிறந்த மருத்துவமனை விருதினை திரைப்பட நடிகர் பாண்டியராஜன் வழங்கி கவுரவித்தார். அப்போது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், பி.எஸ்.என் பொறியியல் கல்லுரியின் சேர்மன் டாக்டர் சுயம்பு, கல்லூரியின் முதல்வர் எம்.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Nellai Shiba Hospital ,Paddy ,Nellai BSN College of Engineering ,Haji ,Managing Director ,Dinakaran ,
× RELATED நெல்லையில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு