×

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி, அக். 1: மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. புதுச்சேரியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உள்ளது. இது போதாது. எனவே புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் கோயில் இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் அபகரிப்பாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி துணையாக இருக்கிறார். இதுபோன்ற மிக மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு விமான நிலையம் கட்ட 3000 கோடி ரூபாய் தேவையா?. அதேபோல் சட்டசபை கட்ட 400 கோடி ரூபாய் தேவையா?. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாநில வளர்ச்சிக்காக மக்கள் நலனுக்காக தமிழக முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டுள்ளார். அதுபோன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் மாநில வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற பிரதமர் மோடியை சந்தித்து நிதிகளை கேட்டுப் பெற வேண்டும்.

மக்களைப் பற்றி சிந்திக்காமல் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகளை கொண்டு வராமல் புதுச்சேரி வளர்ச்சியை காண முடியாது. எனவே தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் இந்திய வெளியூறவு துறை அமைச்சர் இலங்கை அரசுடன் நேரடியாக பேச வேண்டும். இலங்கை அரசோடு இந்திய அரசு இணக்கமாக இல்லாத சூழ்நிலையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ரேஷன்கடை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் தீபாவளிக்கு திறக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இப்படியும் திறக்கவில்லை என்றால் தீபாவளி முடிந்தவுடன் தொடர் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி இறங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Narayanasamy ,central government ,Puducherry ,Former Chief Minister ,Former ,Chief Minister ,Udayanidhi ,Deputy Chief Minister ,Tamil ,Nadu ,
× RELATED தீபாவளிக்குள் புதுச்சேரியில் ரேஷன்...