- தஞ்சாவூர் மாவட்டம்
- காந்தி ஜெயந்தி
- தஞ்சாவூர்
- கலெக்டர்
- பிரியங்கா பங்கஜம்
- அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை
தஞ்சாவூர், அக்.1: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் நாளை (02/10/2024) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post காந்திஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் appeared first on Dinakaran.