×

பக்தர்கள் தரிசனம் புதுக்கோட்டையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரிய நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ். கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அந்தோணி ராஜ் வழக்கு தொடர்ந்தார். பணியிடை நீக்கத்துக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிமணி தலைமையில் ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

The post பக்தர்கள் தரிசனம் புதுக்கோட்டையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Devotees Darshanam Pudukottai ,Pudukottai ,Pudukottai District Annavasal Government Primary School ,Annavasal Panchayat Union Primary School ,Headmaster ,Anthony Raj ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம்