×

புதுக்கோட்டை அரங்குலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டை அரங்குலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடன்உறை அரங்குல நாதர்கோவில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்து சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக பக்தர்கள் சிவசிவ ஹர ஹர கோஷத்துடன் மூன்று முறை சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருளசெய்து பிரகாரர் உலா நடைபெற்றது. இதேபோல் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள் நாயகி அம்பாள் கோயில் திருவுடையார்பட்டி திரு மூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் திருமலைவாயசமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரர் அம்பாள் கோவில் , பாளையூர் பழங்கரை புராதனீஸ்வரர் கோவில் விஜய ரகுநாதபுரம் சிவன் கோவில் ஆகிய இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

The post புதுக்கோட்டை அரங்குலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Arangulanathar Temple ,Periyanaiaki Ambal ,Thiruvarangulam, Pudukottai district ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே தனியார் பள்ளி வாகன விபத்து: 25 மாணவர்கள் காயம்