வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

வத்திராயிருப்பு, அக்.1: வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் பற்றிய கலை மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைமையின் ஆணைக்கிணங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் பற்றிய கலை மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் முனியாண்டி செய்திருந்தார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள கலந்து கொண்டனர்.

 

The post வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: