×

மூணாறு அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை கூட்டம்: தொழிலாளர்கள் அச்சம்

 

மூணாறு, அக்.1: மூணாறு லாக்காடு எஸ்டேட் பகுதியில், உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடலார், நல்லதண்ணி எஸ்ட்டேட் பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை விரட்டுவதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லாக்காடு எஸ்டேட் பகுதியில், குடியிருப்புகளின் அருகே குட்டியுடன் மூன்று யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உடனடியாக காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறு அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை கூட்டம்: தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Lockadu Estate ,Kerala ,
× RELATED மூணாறில் பரபரப்பு : கார்களை சேதப்படுத்திய படையப்பா யானை