×

நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

நத்தம், அக். 1: நத்தம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் காந்திநகர், அய்யாபட்டி பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, அய்யாபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி செய்வது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தூய்மை பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Natham Municipal Council ,Natham ,Forum President ,Sekshikander Bhatsa ,Vice President ,Maheshwari Saravanan ,Executive Officer ,Vijayanath ,Chief Clerk ,Prasad ,Natham Municipal Council Meeting ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நத்தம் சாலையில்...