×

இளையான்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி தெரிவிப்பு

சிவகங்கை, அக்.1: இளையான்குடி பகுதியில் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம் எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இளையான்குடி வடக்கு ஒன்றியம் கோட்டையூர், அண்டக்குடி, வாணி, ஆழிமதுரை, சுந்தனேந்தல், பெரும்பச்சேரி, குணப்பனேந்தல் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, பொதுக்குழு உறுப்பினர் அல்அமீன், வட்டார தலைவர்கள் செல்லப்பாண்டியன், ராமதாஸ், காளிமுத்து, தாமஸ், நீலமேகம், ராஜேந்திரன், சாரதி, சோலை ராஜ், துரைமுருகன், மலைச்சாமி, அற்புதம், மலை மேகு, முருகன் கண்ணன், மைக்கேல் சாமி, லாசர், ஒன்றிய கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post இளையான்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Sivagangai ,Karthik Chidambaram ,Lok Sabha ,North Union Kotayur ,Andakudi ,Vani ,Azhimadurai ,Sundanendal ,Perumbacheri ,Gunapanendal ,
× RELATED டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை