- மீனாட்சிமன்மன் கோவில்
- மதுரை
- மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோயில்கள்
- மதுரை மீனாட்சியம்மன் கோயில்
- - கோவில்கள்
மதுரை, அக். 1: மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ.1.13 கோடி கிடைத்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களில் நிரந்தர உண்டியல்கள் மற்றும் 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நேற்று இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
உண்டியல் திறப்பின் போது, கோயிலின் அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி திருக்கோயில் அறங்காவலர்கள், இந்து சமய நிலைத்துறை உதவி கமிஷனர்கள், கண்காணிப்பாளர்கள், சரக ஆய்வாளர்கள், பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் போது, ரூ. 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165ம், பலமாற்று பொன் இனங்கள் 455 கிராம், வெள்ளி இனங்கள் 649 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 308 எண்ணம் வரப்பெற்றுள்ளன.
The post மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களில் உண்டியல் காணிக்கை ரூ.1.13 கோடி வசூல் appeared first on Dinakaran.