×

சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

சோழவந்தான், அக். 1: சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சியில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.இதற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலரும் பேரூர் செயலாளருமான சத்திய பிரகாஷ்,செயல் அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூய்மை பணி ஆய்வாளர் சூர்ய குமார் வரவேற்றார். இதையடுத்து நகர் பகுதி வளர்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக தேர்வு செய்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chozhawan Municipal Assembly ,Chozhavandan ,Chozhavandan Province ,Chief Minister ,Deputy Prime Minister ,Udayanidhi Stalin ,K. ,Stalin ,Jayaraman ,Sozhavandan ,Mayor ,Chairman of the Assembly ,Dinakaran ,
× RELATED கூலி தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலி கைது