×

வந்தே பாரத் ரயிலில் பாய்ந்து வியாபாரி தற்கொலை

கோவில்பட்டி, அக். 1: விளாத்திகுளம் தாலுகா வீரபாண்டியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (55). இவர், குறுக்குச் சாலையில் உரம், பூச்சி மருந்து மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் பிரச்னை காரணமாகவும் சந்திரன் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று கோவில்பட்டி – நள்ளி ரயில் நிலையம் இடையே சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரன் உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்ஐ பெருமாள். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வந்தே பாரத் ரயிலில் பாய்ந்து வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kovilpatty ,Moon ,Vlathikulam Taluga Veerapandiapuram South Street ,
× RELATED கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும்...