×
Saravana Stores

சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மல்லசமுத்திரம், அக்.1: மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோயிலில், புரட்டாசி மாத சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக நந்தி பகவானுக்கும், சோழீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கோயிலை சுற்றி வலம் வந்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோயிலுக்கு முன்பு நெய் விளக்கு தீபமேற்றி வழிபட்டனர். அனைவருக்கும் கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Choeeswarar temple ,Mallasamutram ,Puratasi ,Choiseswarar temple ,Nandi Bhagwan ,Choeeswarar ,
× RELATED கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாதவர்...