ஈரோடு அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து சேதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனேவில் இருந்து பேட்டரி ஏற்றி கொண்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக லாரி வந்துள்ளது. தருமபுரியை சேர்ந்த ஏழுமலை என்பவர் லாரியை ஊட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சேலம்-கோவை தேசிய நெருஞ்சாலையில் பெருந்துறை அருகே பெத்தாம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் வரும் பொழுது திடீரென லாரியில் தீ பற்றியது உடனடியாக சுதாரித்து கொண்ட ஓட்டுநர் ஏழுமலை லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

பின்னர், லாரி மளமளவென பற்றி முழுமையாக ஏறிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான கரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈரோடு அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: