×

விருதுநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

விருதுநகர், செப்.30: விருதுநகர் சின்னபேராலி ரோடு ரயில்வே பாலம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்ஐ ராஜா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோசல்பட்டி சுரேஷ்(24), சத்திரரெட்டியாபட்டி கார்த்திக்(30) ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்த தனுஷ்(21) என்பவர் தனது வீட்டருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கிழக்கு போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post விருதுநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chinnaberali Road Railway Bridge ,SI Raja ,Rosalpatti Suresh ,Chhattrarediyapatti Karthik ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...