×

மூணாறு அருகே கனமழைக்கு வீடு சேதம்

மூணாறு, செப். 30: மூணாறு அருகே பெய்த கனமழைக்கு வீடுகள் சேதமடைந்தது. கேரளா மாநிலம் மூணாறு அருகே வெள்ளத்துவல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன் தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால், கூம்பன்பாறை ஓடக்காய் சிட்டி பகுதியில் வசிக்கும் நெல்லிமற்றத்தில் சோஷாம்மாவின் வீடு முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இந்நிலையில் வீட்டில் அவர் தனியாக வசித்து வந்த நிலையில் ஓடி அங்கிருந்து தப்பியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த வெள்ளத்துவல் ஊராட்சி அதிகாரிகள் சோஷாம்மாவை (53) அங்கிருந்து மாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

The post மூணாறு அருகே கனமழைக்கு வீடு சேதம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Vellathuval panchayat ,Kerala ,Dinakaran ,
× RELATED மூணாறில் பரபரப்பு : கார்களை சேதப்படுத்திய படையப்பா யானை