×

அஞ்சுகிராமம் ரோகிணி கல்லூரியில் கருத்தரங்கு

 

அஞ்சுகிராமம், செப்.30: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் பொறியியல் துறையின் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். இரண்டாம் ஆண்டு மாணவி ஃப்ரெஹென்சா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருந்தினாராக அரசு பொறியியல் கல்லூரியின் முனைவர் முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரை வழங்கினார். துறைத்தலைவர் டாக்டர் சகாய ரூபன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இறுதியாக 3ம் ஆண்டு மாணவி ஸ்ருதி சஹானா நன்றியுரை வழங்கினார்.

The post அஞ்சுகிராமம் ரோகிணி கல்லூரியில் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Rohini College ,Anjugram ,Department of Structural Engineering ,Rohini College of Engineering ,Balkulam ,College ,President ,Neela Marthandan ,Vice President ,Dr. ,Neela Vishnu ,Managing Director ,Plussy Geo ,Anjugram Rohini College ,Dinakaran ,
× RELATED அழகப்பபுரம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு