×

கன்னியாகுமரியில் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது

 

கன்னியாகுமரி, செப்.30: கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி எஸ்ஐ எட்வர்ட் பிரைட்க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கன்னியாகுமரி வீயூ பாய்ண்ட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடையில் குட்கா விற்றதாக சாமிதோப்பு அருகே சாஸ்தான் கோவில்விளை பகுதியை சேர்ந்த சுசீலா (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.570 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் குமரி பெரியநாயகி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்றதாக அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் மனைவி கேத்தரின் டிரினிட்டா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,420 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கன்னியாகுமரியில் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,SI ,Edward Bright ,Gutka ,Tamil Nadu government ,
× RELATED கன்னியாகுமரி அருகே 4 வழிச்சாலை பணிக்கான கருங்கற்கள் திருட்டு