×

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

திண்டுக்கல், செப். 30:திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். சங்க கவுரவ தலைவர்கள் டாக்டர்.சாந்தி, டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலியை மாத சம்பளமாக வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு வழங்குவதுடன் பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட 28 மாவட்டங்களை சேர்ந்த டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

The post கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu Dengue Mosquito Eradication Front Workers Association ,Dindigul Manikoundu ,Jayawel ,Communist Party of India ,District Secretary ,Manikandan ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை