×
Saravana Stores

தம்பதி மீது உருட்டுக்கட்டை தாக்குதல்

போடி, செப். 29: தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயி(75). விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் அறிவழகன், மருமகன் முருகன்(56). இவர்கள் இருவரும் கடந்த 26ம் தேதி மாயியிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டனராம். அப்போது 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அறிவழகன், முருகன் ஆகியோர் உருட்டு கட்டையால் மாயி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதை தடுக்க வந்த மாயி மனைவி போதுமணியையும் உருட்டு கட்டையால் தாக்கினர். மேலும், சொத்தை உடனடியாக பிரித்து தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த தம்பதியர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாயி அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

The post தம்பதி மீது உருட்டுக்கட்டை தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Mai ,Shankarapuram East Street ,Bodi, Theni District ,Urujana ,Murugan ,
× RELATED போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா மாநாடு