×

முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை, செப். 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடத்தியது.

ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இதில் மருத்துவக்குழுவினரால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் 168 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைக்கு 38பேர் தேர;வு செய்யப்பட்டனர். அவர்கள் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்தூ அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முகாமில் மாவட்ட தலைவர்கள் மெட்ரோ மாலிக், கோவி.ரெங்கசாமி, செயலாளர் பத்மநாதன், பொருளாளர் சீமான், முன்னாள் தலைவர்கள் கண்ணதாசன், ராமமூர்த்தி, சபாபதி, தலைவர் தேர்வு பாலசந்தர், நிர்வாகிகள் ஹரி, ஆரோக்கிய அந்தோணிராஜா, தியாகு, வடிவழகன், சந்திரமோகன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் கண் சிகிச்சை முகாம் சேர்மன் மகாலிங்கம் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Rotary Association ,Coimbatore Sankara Eye Hospital ,Tiruvarur District Vision Loss Prevention Association ,Pudutheru Government Panchayat Union Middle School ,Muthupettai ,Tiruvarur district.… ,
× RELATED மயிலாடுதுறையில் காமாட்சி மெடிக்கல்...