காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

காஞ்சிபுரம்: திமுக ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, அதன் பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பவளவிழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை; “சில கட்சிகளிள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தலுக்குப் பின் கலைந்துவிடும்.

ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. நமது ஒற்றுமையைப் பார்த்து நமது கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக உள்ளது. நமக்குள் மோதல் வராதா, பகையை வளர்க்க முடியாதா என்ற வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவேன் எனச் சொல்வது, ‘கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவர், வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன்’ என்று சொல்வது போல் உள்ளது” என உரையாற்றினார்.

The post காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: