கீழடிக்கு விருது, திராவிட மாடல் அரசுக்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்குகிறது கீழடி. கீழடியில், முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ரூ.18.8 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. பழந்தமிழ் சமூக முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய 11,000-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோர் கீழடி அருங்காட்சியகத்தை உள்ளம் -குளிர கண்டு களிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

The post கீழடிக்கு விருது, திராவிட மாடல் அரசுக்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: