பாரம்பரிய உணவுத் திருவிழா

விருதுநகர், செப்.28: கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இன்றி பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி, வட்டார அளவில் பாரம்பரிய திருவிழா நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மூலம் மாவட்ட அளவில் பாரம்பரிய உணவு திருவிழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. திருவிழாவை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கி
னார்.

The post பாரம்பரிய உணவுத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: