×

வருசநாடு பகுதியில் கொசு தொல்லையை ஒழிக்க வேண்டுகோள்

வருசநாடு, செப். 28: வருசநாடு மற்றும் துரைசாமிபுரம், மூலக்கடை, குமணன்தொழு, முருக்கோடை, கோம்பைத்தொழு. மணலாற்று குடிசை, மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, காமராஜபுரம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக கொசு தொந்தரவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே அதிக அளவில் கொசுக்கள் கடிக்கின்றன.

தற்போது டெங்கு காய்ச்சல் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே அதிகாரிகள் நாள்தோறும் சுழற்சி முறையில் வீடுகள், தெருக்கள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும், சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு பகுதியில் கொசு தொல்லையை ஒழிக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Duraisamipuram ,Moolakadai ,Kumanantholu ,Murukodai ,Kombaitholu ,Manalatu Cottage ,Mayiladumparai ,Ponnanpadukai ,Kamarajapuram ,Dinakaran ,
× RELATED சீலமுத்தையாபுரம் கிராமத்திலிருந்து...