×

அலங்காநல்லூர் அருகே உலக சுற்றுலா தின கலை நிகழ்ச்சிகள்: மாணவர்கள் திரளாக பங்கேற்பு

அலங்காநல்லூர், செப். 28: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில், உலக சுற்றுலா தின கொண்டாட்டம், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இதனை சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள், தோல்பாவை கூத்து, தெருக்கூத்து, தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை பல்வேறு கல்லூரி பள்ளி, மாணவ, மாணவிகள் உற்சாகமாக கண்டு களித்தனர். இதில் மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், தனசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அலங்காநல்லூர் அருகே உலக சுற்றுலா தின கலை நிகழ்ச்சிகள்: மாணவர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : World Tourism Day ,Alankanallur ,District Tourism Department ,Geezhalakarai ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் கோயிலில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு