×
Saravana Stores

கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.14 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

கள்ளிக்குடி, செப். 28: கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று வழக்கமான பணிகள் நடந்து கொண்டு இருந்தன. இதற்காக பொதுமக்களும் அதிக அளவில் அங்கு காத்திருந்தனர். அப்போது திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதி பிரியா ஆகியோர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்திலிருந்த சார் பதிவாளர் புஷ்பலதாவிடம், அவர்கள் சுமார் 3 மணிநேரம் வரை விசாரணை நடத்தினர். மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார் பதிவாளர் மற்றும் அங்கு பணியில் இருப்போரிடம், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.14 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kallikkudi ,Kallikudi ,Gallikkudi, Madurai district ,Gallikkudi ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே கள்ளிக்குடியில் பகுதி நேர நியாய விலை கடை