×

அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் அபகரிக்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது


பெரம்பூர்: புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் வசித்து வருபவர் முகமது அலாவுதீன் (75). இவர் இஸ்லாமியர்களுக்கான தனியார் டிரஸ்ட் ஒன்றை நிறுவி அதன் முதல்வராக இருந்து வருகிறார். இந்த டிரஸ்ட்க்கு அப்துல் முஜீப் என்பவர் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு நான்காவது சந்திலுள்ள இடத்தை 2005ம் ஆண்டு தானமாக கொடுத்துள்ளார். கடந்த 13ம் தேதி மதியம் சுமார் 5க்கும் மேற்பட்டோர் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று இடத்தின் பூட்டை உடைத்து அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என கூறி அந்த இடத்தில் அமர்ந்துள்ளனர். தகவல் அறிந்த முகமது அலாவுதீன் அவர்களிடம் சென்று கேட்டபோது, ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லை என்றால் இடத்தை காலி செய்ய முடியாது என கத்தியை காட்டி மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து முகமது அலாவுதீன் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டேரி தாச மகான் பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (30), அப்துல் ரஹீம் (40), முகமது ரஹீம் (40), சதாம் (27), அக்பர் பாஷா (40) ஆகிய ஐந்து பேர் ஒன்று சேர்ந்து முகமது அலாவுதீன் டிரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் அபகரிக்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Mohammad Alauddin ,Perambur Barracks Road ,Islamists ,Abdul Mujeeb ,Ottery Starens Road ,Dinakaran ,
× RELATED விளை நிலங்களை சேதப்படுத்தி வரும்...