கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே


சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், நாட்டின் மிகப்பெரிய புறநகர் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினசரி 65,000 பயணிகள் வந்து செல்லும் கிண்டி ரயில் நிலையம், சென்னை கடற்கரை – தாம்பரம் பிரிவில் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற முக்கிய சுற்றுலா மற்றும் தொழில்துறை மையங்களுக்கு ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில் ஐஐடி, மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி தொழிற்பேட்டை போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இந்த நிலையம் முக்கியமாக அமைந்துள்ளது.

நகரமயமாக்கலின் வளர்ச்சியுடன், ரயில் நிலையங்களில் பார்க்கிங் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம், பயணிகளின் வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், பயணிகளின் இடையூறு இல்லாத பயணத்தை எளிதாக்குவதற்கு இன்றியமையாததாகிவிட்டது. சென்னை கோட்டம், பல்வேறு புறநகர் ரயில் நிலையங்களில், தானியங்கி மல்டிலெவல் பார்க்கிங் வசதி மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான கார் பார்க்கிங் மேலாண்மை அமைப்பை அமைப்பதற்கு டெண்டர் கோரியுள்ளது. முதற்கட்டமாக, கிண்டி ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிக்கான ஒப்பந்தத்திற்கு மின்-ஏலத்தை அழைக்க சென்னை கோட்டம் முன்மொழிந்துள்ளது. கிண்டி நிலையத்திற்கு முதலில் திட்டமிடப்பட்ட திட்டம், பிற்காலத்தில் நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கிண்டியில் மல்டிலெவல் கார் பார்க்கிங்கிற்கான மின் ஏலம் அக்டோபர் 9ம் தேதி 3.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ஐ.ஆர்.இ.பி.எஸ். இணையதளத்தில். மற்ற அனைத்து விவரங்களும் www.ireps.gov.in இல் உள்ள இ-ஆக்‌ஷன் லீசிங் போர்ட்டலில் கிடைக்கும். இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கானது,மேல் தளங்களில் தானியங்கி கார் பார்க்கிங் மற்றும் தரை தளத்தில் வணிக வசதியுடன் கூடிய கட்டுமானமாக இருக்கும். சிறப்பு அம்சங்கள்: வணிக வசதி, வாகன பராமரிப்பு போன்ற கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகளுடன், ஒப்பந்ததாரருக்கு பிரத்யேக ஏ.வி விளம்பர உரிமைகள், வாகன நிறுத்தத்திற்கு கட்டணமாக நான்கு மணி நேரத்திற்கு ரூ.25 மற்றும் வருடத்திற்கு ரூ. 3,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது மாதாந்திரம் ரயில் பயன்படுத்துபவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் இருவருக்கும் வணிக வளாகத்தின் தரைத்தள உட்புறம் உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், விளையாட்டு மண்டலங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், நர்சரிகள், பாப்-அப் கடைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். ஒப்பந்த காலம்: 15 வருடங்கள் நீண்ட கால காலத்திற்கு ஒப்பந்ததாரர் முதலீடுகளை திரும்பப் பெறுவதில் இருந்து பயனடைவதற்காக வழங்கப்படும். தளத்தை ஒப்படைத்த நாளிலிருந்து ஆறு மாத கால அவகாசம் கட்டுமானம் மற்றும் வசதியைத் தொடங்கவும் கொடுக்கப்படும். இந்த பார்க்கிங் வசதி அமைந்தால் வாகன போக்குவரத்து குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: