உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு


சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி, செயலாளர் சந்தரமோகன், ஆணையர் சமயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டிடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் செயலாளர் சந்தரமோகன் கூறியதாவது: பாரம்பரிய, தொலைநோக்கு பார்வை, கருத்தியல்களை கொண்ட உலகின் முன்னணி நகரம் நமது சென்னையாகும். இதன் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எ்ன்றார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், எத்திராஜ் மகளிர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

The post உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: