திருத்துறைப்பூண்டியில் பெண்களுக்கு சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

 

திருத்துறைப்பூண்டி, செப். 28: இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு சான்றிதழை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வழங்கினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன்பேசுகையில், சுய தொழில் என்பது நமது வாழ்க்கையின் அஸ்திவாரம்.

அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்றார். பயிற்சி குறித்து இயக்குனர் பாலகணேஷ் பேசுகையில், மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகள் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு சுயதொழில் தொடங்க வழிகாட்டப்படுகிறது. எனவே 15 முதல் 45 வயது வரை உள்ள மகளிர் இப்பயிற்சியினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, நகராட்சி மேலாளர் சீதாலட்சுமி, ஸ்கார்டு நிறுவன செயலாளர் பாபுராஜன், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி பாலம் செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் பெண்களுக்கு சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: