மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: கலெக்டர் அழைப்பு

 

தஞ்சாவூர், செப். 28: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம அக்.4ம் தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் அக்.4ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: