×

தஞ்சாவூர் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 லட்சத்தில் சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி

 

ஒரத்தநாடு, செப். 28: தஞ்சாவூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் உள்ள வல்லம் வழியாக செல்லும் ஒரத்தநாடு சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இச்சாலையின் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சாலையில் இருந்து பிரிந்து வடக்கூர் செல்லும் சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த சாலை சந்திப்பில் மேம்பாடு செய்ய பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த சாலை சந்திப்பை ரூ.25 லட்சத்தில் மேம்பாடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சாலை சந்திப்ைப மேம்பாடு செய்வது குறித்து சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் உதவி கோட்ட பொறியாளர் பிரமிளா, உதவி பொறியாளர் கார்த்திகா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பொறியாளர், திறன்மிகு உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தஞ்சாவூர் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 லட்சத்தில் சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி appeared first on Dinakaran.

Tags : Thanjavur Orathanadu Highway Department ,Orathanadu ,Thanjavur District Highway Department ,Orathanadu Highway ,Orathanadu Road ,Vallam ,Utkotam ,Dinakaran ,
× RELATED ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு