×

பொன்னமராவதியில் காவலர் குடியிருப்பு கட்ட வேண்டும்

 

பொன்னமராவதி,செப்.28: பொன்னமராவதியில் காவலர் குடியிருப்பு கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிய ஏதுவாக காவலர் குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அமரகண்டான் வடகரையில் முன்பு காவலர் குடியிருப்பு இருந்தது. இதில் காவலர்கள் குடியிருந்து வந்தனர்.

இதனையடுத்து இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்தது. பின்னர் இந்த கட்டிடம் 20ஆண்டுகளுக்கு முன்னால். இடிந்தது.  இதன் பின்னர் காவலர் குடியிருப்பு இல்லை. இதனால் பொன்னமராவதி காவல்நிலையம் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியம் காவலர்கள் வெளியு+ரில் இருந்து வந்து செல்கின்றனர். எனவே இங்கு பணிபுரியும் காவலர் பொன்னமராவதியிலேயே குடும்பத்துடன் தங்க ஏதுவாக காவலர்குடியிருப்பு கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதியில் காவலர் குடியிருப்பு கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ponnamarawati ,Ponnamarawati Police Station ,Ponnamaravathi ,Amarakhandan ,Ponnamarawat ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஊராட்சி பகுதியில்...