அரியலூர், செப். 28: அரியலூர், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் வடிவேல் உத்தரவின்படி, அரியலூர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் உட்கோட்ட பொறியாளர்கள் முன்னிலையில் மணல் மூட்டைகள் கட்டி சேகரிக்கும் பணி, கருவிகள் மற்றும் தளவாடங்கள் சரிசெய்யும் பணி மற்றும் மழைக்காலங்களில் கல்வெர்ட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நீர்வழிப்பாதை சுத்தம் செய்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை appeared first on Dinakaran.