×

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்கலாம்

 

நாகப்பட்டினம்,செப்.28: முதல்வர் 78-வது சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும்.

ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். எனவே சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியின்போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தங்களது விருப்பத்தை விண்ணப்பத்தின் மூலமாக நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிடலாம். கூடுதல் தகவல் பெற நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ எண் 04365 299765 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nagapattinam ,78th Independence Day ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...