×

மயிலாடுதுறையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி

 

மயிலாடுதுறை, செப்.28: மயிலாடுதுறையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார். மயிலாடுதுறை அடுத்த அகரக்கீரங்குடியை சேர்ந்த தொழிலாளி பாரதிராஜா. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். பாரதிராஜா மற்றும் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அலறியடித்து கொண்டு பாரதிராஜா குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து தப்பினர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானது. இந்த தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் நேற்று சென்று பாரதிராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் எம்எல்ஏ ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி ஆகியோர் இணைந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.

The post மயிலாடுதுறையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Mayiladu ,Mayiladudhara ,MLA ,Rajkumar ,Bharathiraja ,Agarakirangudi ,Mayiladuthura ,
× RELATED மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு...