×

கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

ராசிபுரம், செப்.28: ராசிபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (70). இவர் ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில், திருமுருகன் நகரில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கலைச்செல்வி நேற்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த கலைச்செல்வியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

The post கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு appeared first on Dinakaran.

Tags : RASIPURAM ,KALAICHELVI ,Thirumurugan ,Sendamangalam Division Road ,Dinakaran ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்