×

₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், செப்.28: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், முதல் தரம் கிலோ ₹108.80 முதல் ₹123.65 வரையிலும், இரண்டாம் தரம் ₹78.30 முதல் ₹98.10 வரையிலும் விலை போனது. மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 75 மூட்டை கொப்பரை ₹3.50 லட்சத்திற்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும் 4ம் தேதி நடைபெறும். தொடர்ந்து நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், 25 மூட்டைகள் ₹40 ஆயிரத்திற்கு ஏலம் போனது. பட்டாணி ஈரப்பதம்(60 கிலோ) ₹2430 முதல் ₹2580 வரையிலும், காய்ந்த கடலை ₹3329 வரையிலும் விலை போனது. அடுத்த நிலக்கடலை ஏலம் வரும் 30ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : MLACHAMUTHIRAM ,KOPBER ,MULLASAMUTHIRAM ,TRICHENGODU AGRICULTURAL PRODUCERS COOPERATIVE SALES ASSOCIATION ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு செல்லும் மேரிகோல்டு